அபாய அளவைத் தாண்டிய 24 ஆறுகள்
- Shan Siva
- 28 Nov, 2025
கோலாலம்பூர், நவ 28: ஒன்பது மாநிலங்களில் உள்ள இருபத்தி நான்கு ஆறுகள் மற்றும் ஒரு அணை இன்று காலை 11 மணி நிலவரப்படி அபாய அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸில் உள்ள இரண்டு நீர்நிலைகள் - கம்போங் சுங்கை பகாவ்வில் உள்ள சுங்கை பெர்லிஸ் மற்றும் திமா தாசோ அணை ஆகியவற்றின் நீர்மட்டம் ஆபத்து வரம்புக்கு மேல் பதிவாகியுள்ளன.
கெடாவில் ஐந்து ஆறுகள் அபாய அளவைத் தாண்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேராக்கில் ஒரு ஆறும் அப்பாய அளவைத் தாண்டியுள்ளது.
கோலாலம்பூரின் ஜாலான் குவாரியில் உள்ள சுங்கை கெராயோங்கும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நெகிரி செம்பிலானில் ஆறு ஆறுகள் அபாயப் புள்ளிக்கு மேல் பதிவாகியுள்ளது. மலாக்காவில், ஐந்து ஆறுகள் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் ஜொகூரில் ஒரு ஆறும், திரெங்கானுவில் இரண்டு ஆறுகளும் அபாய வரம்பை தாண்டிவிட்டன .
கிளந்தானில் இரண்டு ஆறுகள் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



