சூடான் – தெற்கு சூடான் எல்லையில் மோதல்: 26 பேர் பலி, 82 பேர் காயம்

top-news
FREE WEBSITE AD

கார்டூம்: சூடான் – தெற்கு சூடான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான மோதலில் 26 பேர் உயிரிழந்ததுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக இரு நாடுகளும் உரிமை கோரி வரும் அபேயி பகுதி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பிரதேசமாக இருந்து வருகிறது. இந்த பகுதி தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில், அபேயி நகரில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் நகோக் டிங்கா மற்றும் மிசிரியா சமூகங்களைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல் வன்முறையாக மாறியதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 82 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *