ஷா ஆலம் ஆடை தொழிற்சாலையில் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்திய 26 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மே 14 : போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதற்காக, ஷா ஆலமில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 26 தொழிலாளர்களை தேசியப் பதிவுத் துறை (NRD) இன்று கைது செய்தது.

ஒப்ஸ் பாண்டன் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையில், NRD அமலாக்க அதிகாரிகள், தொழிலாளர் மற்றும் குடிநுழைவுத் துறைகளுடன் இணைந்து, அந்த வளாகத்தில் 134 தொழிலாளர்களைச் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்ட இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுவதாக NRD அமலாக்க இயக்குநர் மஸ்ஹத் அப்துல் அஜீஸ் கூறினார்.

இருபது பெண் தொழிலாளர்களும் ஆறு ஆண் ஊழியர்களும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. மீதமுள்ளவர்கள் உள்ளூர்வாசிகள் என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *