கடத்தப்பட்ட 2 இந்தோனேசியப் பெண்கள் மீட்பு!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 15,

சட்டவிரோதமாக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டு கட்டாயப் பணியாளல்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த 2 இந்தோனேசியப் பணிப்பெண்களைத் தேசியக் குடிநுழைவுத் துறை மீட்டது. கடந்த ஜனவரி 6 ஆம் திகதி காப்பாரில் உள்ள வணிக்க கடையின் மேல் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதல் பெண்ணை மீட்டதாகவும் அவர் வழங்கிய தகவலின்படி ஜனவரி 12 புக்கிட் ஜெலூத்தோங்கில் மற்றொரு பெண் மீட்கப்பட்டதாகவும் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட 45 வயது 54 வயதுடைய இருவரும் பணியாளர்களாக இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சுமார் ஓராண்டுக்கும் மேல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் தரவிறக்க நிறுவனத்தின் மேலாளரான 38 வயது உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *