கட்டுப்பாட்டை இழந்த 2 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி தீயில் கருகியது!

top-news

பிப்ரவரி 11,

George Town செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Mercedes A250 Sport, Perodua Alza ரக 2 கார்கள் விபத்துக்குள்ளானரில் இரண்டு கார்களும் தீயில் கருகியதாக Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார். அதிகாலை 2.30 மணியளவில் Jalan Tun Sardon சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Mercedes A250 Sport ரக வாகனம் Perodua Alza வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Mercedes A250 Sport வாகனத்தில் இருந்த 3 ஆண்களும் காயங்களின்றி தப்பிய நிலையில் Perodua Alza வாகனத்தில் இருந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.

Mercedes A250 Sport dan Perodua Alza terbakar selepas kemalangan di Jalan Tun Sardon, George Town. Mercedes hilang kawalan dan melanggar Perodua Alza. Tiga lelaki terselamat tanpa cedera manakala lima sekeluarga cedera dan dihantar ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *