போதைப்பொருளுடன் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள்களை விற்ற 28 வயதுள்ள உள்ளூர் ஆடவர் ஒருவரையும் வெளிநாட்டு ஆடவரையும் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக Miri மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார். Tudan குடியிருப்புப் பகுதியில் பொட்டலங்களில் போதைப்பொருள்களை விற்பதாகத் தகவல் கிடைத்து இச்சோதனையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து 30.7 gram எடையிலான Methamphetamine வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு RM 3,375 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வரும் நிலையில் அவர்கள் இதுவரையில் போதைப்பொருள் விற்ற நபர்களில் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவல் தெரிவித்தார்
Polis Miri menahan dua lelaki, termasuk seorang warga asing kerana disyaki mengedar dadah di Tudan pada 27 Februari. Mereka ditangkap bersama 30.7 gram Methamphetamine bernilai RM3,375.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *