லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 08 Feb, 2025
பிப்ரவரி 8,
கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்திசையில் வந்த இரு வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலை 4.50 மணிக்குக் கோத்தா பாருவிலிருந்து குவா மூசாங் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு வாகனத்தில் இருந்த மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் Sultan Ismail Petra மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லாரி ஓட்டுநன் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாகவும் Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.
Sebuah lori hilang kawalan dan merempuh dua kenderaan di jalan Kota Bharu-Kuala Krai serta menyebabkan dua mangsa maut di tempat kejadian. Dua lagi cedera dan dirawat di Hospital Sultan Ismail Petra manakala pemandu lori hanya mengalami kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *