கோலாலம்பூர் மற்றும் பாடாங் பெசாருக்கு தீபாவளி முன்னிட்டு கூடுதலாக 2 ETS சேவைகள்!

top-news

கோலாலம்பூர், அக்.11-

தீபாவளித் திருநாள் இன்னும் குறுகிய காலத்தில் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு கேஎல் சென்ட்ரல்- பாடாங் பெசார் வரையிலான இருவழி கூடுதல் இடிஎஸ் பயணச் சேவைகளை கேடிஎம்பி ஏற்படுத்த உள்ளது.

இந்த கூடுதல் ரயில் சேவைகள் பயணிகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை வழங்கப்படும். இப்பெருநாள் கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான கூடுதல் டிக்கெட்டுகள் காலை 10 மணியிலிருந்து விற்கப்படும். இந்த கூடுதல் ரயில் சேவையில் நாளுக்கு 630 டிக்கெட்டுகள் விற்கப்படும். இதில் விற்பனை பிரிவு உட்பட ஒட்டுமொத்தமாக 3,150 டிக்கெட்டுகள் விற்கப்படும் என்று ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்