கார் மோதியதில் 15 வயது 16 வயது இளைஞர்கள் இருவர் பலி! மூவர் படுகாயம்!

top-news

மார்ச் 7,

சிரம்பானிலிருந்து Jalan Persiaran Senawang 1 செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களை மோதிய கார் விபத்தில் 15 வயது 16 வயதுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் மூவர் உயிரிழந்த்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிஞ்சை விளக்கை மீறி வாகனம் சாலையைக் கடக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இரவு 8.30 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் காவல் நிலையத்திற்குக் கிடைத்ததாகவும் காரை ஓட்டிய 18 வயது இளைஞரும் 17 வயது இளைஞரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் நிலையில் விபத்தை நேரில் கண்டவர்கள் காவல்நிலையத்தில் சாட்சியம் அளிக்கும்படியும் Mohamad Hatta Che Din கேட்டுக் கொண்டார்.

Dua remaja maut dan tiga cedera parah dalam kemalangan di Seremban apabila sebuah Honda Jazz melanggar dua motosikal selepas gagal berhenti di lampu merah. Mangsa cedera dirawat di Hospital Tuanku Jaafar. Polis meminta saksi tampil memberikan maklumat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *