ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் பலி! இருவர் மீட்பு!
- THINAGAREN SANGGAREN
- 13 May, 2026
மே 13,
JERAM PASAR ஆற்றில் 4 தோழிகளுடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயது 12 வயதுள்ள இரு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் 3.10 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் மூழ்கிய இரு சிறுமிகளை உயிருடன் மீட்டதாகவும் மேலும் இருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் திரங்கானு மாநில மீட்பு ஆணைய அதிகாரி Baharum Hasim தெரிவித்தார்.
14 மீட்பு அதிகாரிகளுடன் சுமார் 3 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் இரு சிறுமிகளின் உடலும் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 15 வயதுள்ள Nur Afiqah Shahirah 50 மீட்டர் தூரத்தில் 7 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் 12 வயது Nur Shahila Shahirah 75 மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் Hospital Sultanah Nur Zahirah அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



