ஏடிஎம் நிதி ஊழல் வழக்கு: மூத்த அதிகாரிகள் விரைவில் குற்றச்சாட்டப்படுவர்

top-news

கோலாலம்பூர், ஜன. 19-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்துள்ள மலேசிய ஆயுதப் படைகள் (ATM) தொடர்புடைய இரண்டு ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று மூத்த அதிகாரிகள், விரைவில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM நிதியை உள்ளடக்கிய இந்த ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது முழுமையடைந்துள்ளதுடன், அதற்கான விசாரணை அறிக்கைகள் (kertas siasatan) குற்றப்பத்திரிகை பரிசீலனைக்காக அரசு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

SPRM தலைமை ஆணையர் தன் ஸ்ரீ அசாம் பாகி, தொடர்பு கொள்ளப்பட்டபோது, ‘ஆப்ஸ் பாராசிட்’ (Ops Parasit),  ‘ஆப்ஸ் ஸ்டார்’ (Ops Star) என அழைக்கப்படும் இந்த இரண்டு விசாரணைகளுக்கான முழுமையான அறிக்கைகள் சட்ட நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

“ATM-இன் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த விசாரணைகளுக்கான அறிக்கைகள் முழுமையாக தயார் செய்யப்பட்டு, குற்றச்சாட்டு பரிந்துரைகளுடன் இன்று அரசு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்து அறிவுறுத்தல்கள் வழங்குவார்கள்,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *