தாய்லாந்தில் 87 கிலோ போதைப்பொருளுடன் 3 மலேசியர்கள் கைது

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஆக. 4-

 தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து ஹாட் யாய் நோக்கி ரயிலில் பயணம் செய்த மூன்று மலேசியர்கள், சுமார் 87 கிலோ கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஷாபு) போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஹாட் யாய் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் ஹாட் யாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ரயில்வே போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் பிராந்திய 9 போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.

சந்தேக நபர்கள் பாங்காக்கில் இருந்து ஹாட் யாய் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூன்று சக்கர பயணப் பெட்டிகளிலும், மூன்று தோள்பைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 87 கிலோ கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஷாபு) கண்டுபிடிக்கப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *