சட்டவிரோத மோட்டார் பந்தயத்திற்கு போலீஸ் அதிரடி: 30 அபராதம், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

top-news

சுங்கை பட்டாணி, ஜூன் 11 –

சட்டவிரோத மோட்டார் பந்தய நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் சுங்கை பட்டாணியில் போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் 30 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதுடன், ஆறு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ராம்லான் கூறுகையில், பண்டார புத்ரி ஜெயாவில் சட்டவிரோத மோட்டார் பந்தயங்கள் அடிக்கடி நடைபெறுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இதையடுத்து, கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 30 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்