நிலச்சரிவு அபாயமுள்ள 3,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் அடையாளம் – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 20-
நாடு முழுவதும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய சுமார் 3,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.
அரசின் மேலாண்மை, பாதுகாப்பான வளர்ச்சி திட்டமிடலை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கனிம, புவியியல் துறை (JMG) மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 2,966 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய இந்த வரைபடம், மலைப்பகுதிகளில் உள்ள செயலில் இருக்கும் விவசாய நிலங்களையும் உள்ளடக்குகிறது.
கேமரன் ஹைலேண்ட்ஸ் (475 சதுர கிலோமீட்டர்), சபாவில் உள்ள குண்டாசாங் (370 சதுர கிலோமீட்டர்) ஆகியவை அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வரைபடத் தகவல்கள், சரிவு அபாயம், ஆபத்து வரைபடம் (PBRC) உருவாக்க பயன்படுத்தப்படுவதோடு, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் நிறுவல், சரிவு பராமரிப்பு, நிலப் பயன்பாட்டு திட்டமிடலுக்கு உதவுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



