போதைப்பொருள் வழக்கில் நாடு முழுவதும் 3 லட்சம் பேர் கைது! – காவல்துறை
- THINAGAREN SANGGAREN
- 29 Mar, 2026
மார்ச் 29,
கடந்த 2023 முதல் 2025 வரையில் தேசிய காவல்துறை போதைப்பொருள் குற்றங்களில் ஈடுப்பட்ட 306,230 பேரைக் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். மொத்தம் 242,075 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் தயாரித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற வெவ்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக மொத்தம் 306,230 பேரைக் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Hussein Omar Khan விளக்கமளித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 73,340 வழக்குகளும், 2024 ஆம் ஆண்டு 81,090 வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு 87,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Datuk Hussein Omar Khan தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு 94,799 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 2024 ஆம் ஆண்டு 102,201 பேர் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 109,230 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் போதைப்பொருள் தொடர்பானக் குற்றச் செயல்கள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை Datuk Hussein Omar Khan சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



