மியன்மார் நிலநடுக்கத்தில் இதுவரை 3,471 பேர் பலி- ஸ்மார்ட் இன்று நாடு திரும்புகிறது!

top-news
FREE WEBSITE AD

யங்கூன் (மியன்மார்), ஏப். 7 -

ரிக்டர் அளவைக் கருவியில் 7.7ஆகப் பதிவான மியன்மார் நிலநடுக்கத்தில், சனிக்கிழமை வரை கிடைத்த தகவல்கள்படி மொத்தம் 3,471 பேர் பலியாகி இருக்கின்றனர்.
அந்நிலநடுக்கத்தில் 4,671 பேர் காயமடைந்திருப்பதோடு, 214 பேர் காணாமல் போயிருப்பதாக, தி மிரர் தகவல் சாதனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக, ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்நாடு மற்றும் அனைத்துலக மீட்புக் குழுவினர் மொத்தம் 653 பேரை உயிருடன் காப்பாற்றி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களாவர்.

இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து 682 சடலங்களையும் மீட்புக் குழுவினர் (ஸ்மார்ட்) மீட்டிருப்பதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.இதனிடையே, மியன்மார் சென்றிருந்த மலேசிய சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தங்களின் பணியை முடித்துக் கொண்டு இன்று திங்கள்கிழமை நாடு திரும்ப விருக்கின்றனர்.

பேரிடர் நிகழ்ந்துள்ள கட்டட இடிபாடுகளில் இன்னும் யாரும் உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்படாததால், மீட்புப் பணி அவசியம் நிறுத்தப்பட வேண்டி இருந்த காரணத்தினால்,
ஸ்மார்டின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி முடிவடைந்து விட்டது என்று. வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

“ஒருவர் மட்டுமே உயிருடன் இருந்ததை நமது ஸ்மார்ட் கண்டு பிடித்து மீட்டிருந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மற்றவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்" என்று மியன்மாருக்கான தமது ஒரு நாள் மனிதாபிமான பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன்னர் பெர்னாமாவிடம் பேசும்போது முஹமட் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி நிகழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த அந்த நிலநடுக்கத்தில், மியன்மாரின் சகெயிங் பகுதிதான் மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது. அங்குதான் ஸ்மார்ட் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.மலேசியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு, அங்குள்ள மக்கள் ஸ்மார்ட் குழுவினருக்கு மிகவும் மதிப்பளித்து நன்றி தெரிவித்ததாகவும் முஹமட் கூறினார்.

Gempa bumi bermagnitud 7.7 di Myanmar meragut 3,471 nyawa dan mencederakan 4,671 orang. Pasukan penyelamat, termasuk SMART Malaysia, menyelamatkan 653 mangsa dan menemui 682 mayat. SMART menamatkan misi setelah tiada mangsa hidup ditemui. Rakyat Myanmar menghargai bantuan kemanusiaan yang diberikan Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *