UPSR & PT3 தேர்வுகள் மீளாய்வு செய்யப்படும்! – கல்வி அமைச்சர்
- Shan Siva
- 09 Jan, 2026
புத்ராஜெயா, ஜன 9: UPSR மற்றும் PT3 உள்ளிட்ட தேர்வுகள் தொடர்பான விவகாரத்தை அரசு மீளாய்வு செய்யும் என கல்வித்துறை அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்னும் பெற்றோர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதால், இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய கல்வி ஆலோசனைக் குழு (NEAC) இந்த மீளாய்வை நடத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் விவாதமாய் உள்ள எந்தத் தேர்வுகளும், அதாவது தற்போது பொதுமக்கள் கவனிக்கும் தேர்வுகள் தொடர்பாக, கல்வித்துறை இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமட் கருத்து தெரிவிப்பார். குழு உறுப்பினர்கள் அதை விவாதிப்பார்கள் என அவர் கூறினார்.
எந்தவொரு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் அல்லது முடிவுகளும் அமைச்சரவை முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் கூறினார். மீளாய்வு நடைபெற வேண்டிய காலக் காலக்கெடு குறித்து கேள்வி எழுந்தபோது, விரைவில் இது நடைபெறும் என்றும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



