பந்திங்கில் 3 வீடுகள் தீயில் நாசம் ! சிறுவன் மரணம்

top-news
FREE WEBSITE AD

பந்திங், பிப் 6: பந்திங், கம்போங் ஸ்ரீ சீடிங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்தால் ஒவ்வொரு வீடும் சுமார் 90 சதவீதம் வரை சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த மூன்று வயது சிறுவன், ஒரு வீட்டின் முதன்மை படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டான் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இன்று அதிகாலை 2.44 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, தெலுக் பாங்கிளிமா காராங், பந்திங் மற்றும் கேஎல்ஐஏ தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

2.56 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு குழு, 3.30 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த மீட்பு நடவடிக்கையில் 17 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதுடன், அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) அலகு மற்றும் நீர் கொள்கலன் லாரி உட்பட நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *