2 கிலோ போதைப்பொருளுடன் நண்பர்கள் மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
2 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவர் இன்று தெலுக் இந்தான் Majistret நீதிமன்றத்தில் தங்கள் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 39 வயது Mohamad Hafis Abu Bakar, 34 வயது Muhamad Aliff Saidin, 27 வயது Muhammad Aiman Afiq Muhamad Yusri ஆகியோர் கடந்த வாரம் தெலுக் இந்தானில் Jalan Changkat Jong சாலையில் போதைப்பொருளைக் கைமாற்றும் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
RM65,000 மதிப்பிலான syabu, methamphetamine வகையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் மூலம் போதைப்பொருள் விற்பனையாளர்களையும் தேட காவல் துறைக்குத் தெலுக் இந்தான் Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tiga lelaki dihadapkan ke Mahkamah Majistret Teluk Intan atas tuduhan mengedar hampir 2kg dadah methamphetamine. Mereka ditangkap selepas polis merampas dadah bernilai RM65,000 dalam serbuan di sebuah pasar raya di Teluk Intan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *