MRT புத்ராஜெயா கேபிள் திருட்டு – நான்கு பேர் கைது
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 15-
புத்ராஜெயா MRT பாதையில் கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் காரணமாக MRT சேவை மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 3ஆம் தேதி, ஸ்ரீ டாமான்சாரா பாராட் MRT நிலையம் அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பிரசாரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) நிறுவனத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
பிரசாரானா குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அமீர் ஹம்டான் தெரிவித்ததாவது, இந்த கைது நடவடிக்கை பிரசாரானா துணை காவல்துறை பிரிவு மற்றும் மலேசிய அரச காவல்துறை (PDRM) இணைந்து மேற்கொண்ட நுண்ணறிவு தகவல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் விளைவாக இடம்பெற்றது.
இந்தக் கேபிள் திருட்டு சம்பவம் காரணமாக புத்ராஜெயா MRT பாதை சேவை மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டது. இதனால் பிரசாரானா இயக்கும் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும், பொது போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



