துப்பாக்கி முனையில் கடத்தல்: பெண் உட்பட 5 பேருக்கு 15 நாள் தடுப்புக்காவல்

top-news
FREE WEBSITE AD

பாசிர் மாஸ், ஜூன் 8 –

51 வயது ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஐந்து பேரை 15 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு உதவும் வகையில், இன்று முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு பாசிர் மாஸ் மாஜிஸ்திரேட் சையிட் பாரிட் சையிட் அலி உத்தரவிட்டார்.

1961-ஆம் ஆண்டின் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (Akta Penculikan 1961) பிரிவு 12-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சுமார் 8.50 மணியளவில், போலீஸ் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள் பாசிர் மாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்கியிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிளந்தான் மாநிலத்தின் தும்பாட் பகுதியில் 51 வயது ஆடவர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் ஐந்து சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *