24 வது மாடியிலிருந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி! - பாலிக் பூலாவில் பரிதாபம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 27: பாலிக் பூலாவ் தெலுக் கும்பாரில், குடியிருப்பில் 24-வது மாடி வரவேற்பறை ஜன்னலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஏறியபோது தவறி விழுந்ததில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான்.

சிறுவனின் தந்தை வேலை விஷயமாக சிறிது நேரம் வெளியே சென்றிருந்ததாகவும், அவனது தாய் வேலை விஷயமாக வெளிநாட்டில் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பாராட் டயா காவல் நிலையத் தலைவர் அனுவால் அப்துல் வஹாப் கூறினார்.

சிறுவன், உறங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு உடன்பிறப்புகளுடன் வீட்டில் இருந்தான். "வரவேற்பறை ஜன்னலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஏறுவதற்கு முன்பு அவன் தூக்கத்திலிருந்து எழுந்ததாகவும், பின்னர் தவறி விழுந்ததாகவும் நம்பப்படுகிறது  என்று அனுவால் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில், இதில் எந்தவிதமான குற்றச் செயலுக்கான ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *