5,000 டன் எடைகொண்ட ‘காங் கோன்’ போர்க்கப்பல் வடகொரியா அணுசக்தி படையில் இணைப்பு

top-news
FREE WEBSITE AD

பியாங்யாங், செப். 7 –

வடகொரியா தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையாக, 5 ஆயிரம் டன் எடைகொண்ட ‘காங் கோன்’ என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலை அணுசக்தி தடுப்பு படையின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாகக் கடற்படையில் இணைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், வடகொரியா புதிய ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘காங் கோன்’ போர்க்கப்பல் வடகொரியாவின் கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. இது ‘சோ ஹியோன்’ வகையைச் சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு போர் திறன் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளையும் இந்த கப்பல் வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் நேரில் கலந்து கொண்டார்.

அப்போது ராணுவத்தினரிடம் பேசிய அவர், போர்க்கால சூழ்நிலைகளில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக செயல்படுத்தி எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் திறன் கடற்படைக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *