கோப்பெங் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளிக்கு வெ.50,000 மானியம்!
- Muthu Kumar
- 22 Feb, 2025
(டிகே.மூர்த்தி)
கோப்பெங், பிப்.22-
தாமான் டேசா பிஞ்சி வட்டாரத்தில் 180 மாணவர்கள் மற்றும் 18 ஆசிரியர்களுடன் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக (2024) ஆண்டு பட்ஜெட்டின் வழி அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் வெ.50,000 மானியம் வழங்கினார் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கஹார் ஹிங் என்று மாநில தமிழ்ப்பள்ளி தீர்வுக் குழு தலைவர் நித்தியானந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அவர் வழங்கிய அந்த மானியத்தின் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை பொருள்கள் பள்ளியில் பொருத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம், பள்ளி முதல் தவணைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வருகை அளித்துள்ள நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு தமது வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தவிர, வழங்கப்பட்ட அந்த மானியத் தொகையின் மூலம், குத்தகையாளர் நேர்மறையான முறையில் பொருள்கள்
பொருத்தப்பட்டுள்ளதை டான் கஹார் ஹிங் நேரில் கண்டறிந்துள்ளார். அந்த வகையில் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதிக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், வாரியக் குழுவுக்கும் வாழ்த்துகள் வெளிப்படுத்தினார்.
ஒரு பள்ளியின் வளர்ச்சி என்பது. அமைச்சர், துணையமைச்சர் மற்றும் நாடாளுமன்றம்-சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, அரசாங்க ஊழியர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் முன்னெடுக்கும் நேர்மறையிலான செயல்பாடுகள்தான் அப்பள்ளிக்கு நம்பிக்கையுடன் போடும் திட்டங்கள் சென்றடைகின்றன. பிரதமரின் எதிர்பார்ப்பும் இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய கல்வி ஆண்டில், முதலாமாண்டில் மொத்தம் 20 மாணவர்கள் பதிவுபெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு அவர் நல்லாசிகளும் வழங்கியுள்ளார்.அந்த சூழ்நிலையில், அப்பள்ளி வளாகத்தின் மேல் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் அருகிலுள்ள மேட்டுக் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்த மண் சரிவினால் பள்ளிக்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், தமது நாடாளுமன்ற வெற்றியை உறுதி செய்துள்ள தொகுதி மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மக்கள் சேவை மையத்தின் முதன்மையான பொறுப்பாகும் என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் தீவிரமாகவும் செயல் படுகிறார் என நித்தியானந்தன் எடுத்துரைத்தார்.
மண் சரிவு பிரச்சினையை தீர்ப்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில், இந்த மண் சரிவு குறித்த சம்பவத்தை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தீர்வு குழுத் தலைவர் நித்தியானந்தன் அவர் தம் நிர்வாகத்திற்கும் டான் கஹார் ஹிங் நன்றி தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



