KLIA வழியாக RM 52.9 மில்லியன் AI சிப்கள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 27: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக RM52.9 மில்லியன்மதிப்புள்ள மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப்களைக் கடத்தும் முயற்சியை முறியடித்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு அவசியமான சிப்கள் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உயர் செயல்திறன் சிப்களின் போக்குவரத்திற்கு மலேசியா கடந்த ஆண்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது.

ஜூன் 5 அன்று, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விமான நிலையத்தின் சுதந்திர வர்த்தக மண்டலத்திற்குள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப்களைக் கொண்ட 72 சர்வர் யூனிட்களைக் கண்டுபிடித்ததாக KLIA சுங்கத்துறை இயக்குனர் சுல்கிஃப்லி முஹம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சர்வர்கள் ஆசியாவில் உள்ள மற்றொரு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட இருந்தன என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என சுல்கிஃப்லி கூறினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையைக் காரணம் காட்டி, அவர் மேலதிக விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

 சர்வர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், இந்த சரக்கு அனுப்புதலுக்கு உதவிய மலேசிய நிறுவனம் ஒன்று விசாரணைகளுக்கு உதவ அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *