புதிய MyKad-ல் 53 புதிய சிறப்பம்சங்கள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 8: அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய MyKad-ல் தற்போதைய அட்டையில் உள்ள 23 பாதுகாப்பு அம்சங்களுக்கு பதிலாக மொத்தம் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தேசிய பதிவுத்துறை (NRD) தலைமை இயக்குநர்  டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்தார்.

புதிய MyKad-ல் லேசர் பொறித்தல் (Laser Engraving), அல்ட்ரா வயலெட் (UV) அம்சங்கள், ஹோலோகிராம், Guilloche வடிவமைப்புகள், Microtext, அமலாக்கப் பயன்பாட்டிற்கான QR குறியீடுகள் மற்றும் மேம்பட்ட குறியாக்க (Encryption) தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றார்.

தற்போது பயன்படுத்தப்படுகின்ற MyKad-ஐ விட இது அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்றும், உள்துறை அமைச்சகம் உரிய நேரத்தில் இதன் அறிமுகத்தை அறிவிக்கும். என்றும் அவர் கூறினார். தேசிய பதிவுத்துறை அளவில், இதை அமல்படுத்த முழுமையாக த் தயாராக உள்ளோம் என்று அவர் நேற்று நடைபெற்ற NRD நிர்வாகம் மற்றும் ஊடக சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேவேளை, புதிய MyKad-ல் Touch ’n Go வசதி இடம்பெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *