3 குழந்தைகள் உட்பட ஐவர் விபத்தில் பலி! இருவர் படுகாயம்

- Sangeetha K Loganathan
- 12 Jan, 2025
ஜனவரி 12,
குவாந்தான் சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு 7.15 மணிக்குக் குவாந்தான் ரொம்பினிலிருந்து Nenasi செல்லும் சாலையில் Proton Wira வாகனமும் Nissan Grand Livina வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக Pekan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.
Proton Wira வாகனத்தில் இருந்த 52 வயது Hamzah Zahari, 38 வயது Rahimah Awang Muda, 10 வயது Ainul Mardhiyah, 8 வயது Muhammad Luqman, 4 வயது Muhammad Lutfi என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Nissan Grand Livina வாகனத்தில் பயணித்த 51 வயது Wahaid Zakaria, 43 வயது Salasiah Abdul Latif இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் ROMPIN மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Lima sekeluarga maut dalam kemalangan membabitkan Proton Wira dan MPV Nissan Grand Livina di Jalan Nenasi-Rompin. Mangsa termasuk bayi meninggal dunia di lokasi kejadian manakala dua penumpang MPV cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *