கெடாவில் சிக்கன்குனியாவால் 63 பேர் பாதிப்பு!
- Shan Siva
- 11 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 11: கெடா, ஜித்ரா அருகிலுள்ள தாமான் மஹ்சூரி 2C பகுதியில் ஜனவரி 3 முதல் இதுவரை சிக்குன்குனியா நோய்க்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில
வீடமைப்பு, உள்ளூராட்சி
மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் மான்சோர் ஸகாரியா தெரிவித்துள்ளார். இந்த நோயால்
இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
குபாங் பாசு
சுகாதார அலுவலகம் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாக மான்சோர் தெரிவித்தார். இதில் சமூக சுத்தப்படுத்தல்
நடவடிக்கைகளும் அடங்கும் என்று தெரிவித்தார்.
இந்த முயற்சிகளில்
குபாங் பாசு நகராட்சி மன்றம், திடக் கழிவு
மற்றும் பொது சுத்தம் மேலாண்மை கழகம் (SWCorp), பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்கள்
இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.
கொசு மூலம் பரவும்
வைரஸ் நோயான சிக்குன்குனியா காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை
ஏற்படுத்தும். சில சமயங்களில் இது உயிருக்கு ஆபத்தாகவும் மாறக்கூடும்.
சுற்றுப்புறத்தை
சுத்தமாக வைத்திருக்கவும், கழிவுகளை முறையாக
அகற்றவும் குடியிருப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மான்சோர் வலியுறுத்தினார்.
அதேபோல்
அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் உடனடியாக சிகிச்சை
பெறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
குபாங் பாசு சுகாதார அலுவலகம், வழக்குகள் அதிகரித்ததையடுத்து மற்றும் சமூக பரவல் அபாயம் உயர்ந்துள்ள நிலையில், பிப்ரவரி 7 முதல் 15 வரை சிக்குன்குனியா தடுப்பு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



