6,417 மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 20: கடந்த  2019 முதல் 2023 வரை மொத்தம் 6,417 நிரந்தர மற்றும் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே காலக்கட்டத்தில் 1,046 மருத்துவ நிபுணர்கள் ராஜினாமா செய்ததையும் தனது துறை பதிவு செய்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்தார். அதோடு,  63 மருத்துவ நிபுணர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த ராஜினாமாக்களுக்கான காரணங்களில் ஒன்று, அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக வேலை வாய்ப்பு வழங்குவதும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மற்ற காரணங்களில் தனிப்பட்ட பிரச்சினைகள், திறன் விஷயங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *