4 மாத குழந்தை உட்பட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்!
- Shan Siva
- 29 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 29: அலோர் ஸ்டார், யான் நகரில் உள்ள கம்போங் பெர்மாத்தாங், கெராமட் என்ற இடத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய நான்கு மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் மீட்கப்பட்டனர்.
காலை 10.16 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு
அவசர அழைப்பு வந்ததாக யான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமது ஃபரித்
முகமது ரசாலி கூறினார்.
ஆறு தீயணைப்பு
வீரர்களுடன் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர்
கூறினார். அவர்கள் காலை 10.30 மணிக்கு அங்கு
வந்தடைந்தனர்.
வெள்ளப்பெருக்கினால்
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கிராமத்திற்குள் புகுந்ததால், பல குடியிருப்பாளர்கள் சிக்கிக்கொண்டதை
மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர்.
மேலதிக உதவிக்காக
பாதிக்கப்பட்ட அனைவரும் கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுவிடம்
ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இரண்டு
காவல்துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணி, காலை 11.19 மணிக்கு நிறைவடைந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



