ஜொகூர் தேர்தலுக்கு 73 பேர் போட்டியிட விண்ணப்பம்! - ரஃபிஸி உற்சாகம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 22: ஜொகூர் தேர்தலில் மலேசிய பெர்சாமா கட்சியின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட மொத்தம் 73 பேர் தாங்களாகவே முன்வந்துள்ளதாக கட்சித் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.

இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று ரஃபிஸி கூறினார்.

தங்களுக்கு சுமார் 73 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும்,  தேர்வு செயல்முறை முடிந்துவிட்டதகாவும் அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்துவோம் என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்முறையைப் பின்பற்ற விரும்புவதால், இந்த அறிவிப்பை தாங்கள் தாமதப்படுத்துகிறோம். வேட்புமனுப் படிவங்கள் மற்றும் வைப்புத்தொகை போன்ற அனைத்து விஷயங்களையும் முதலில் தாங்கள் முடிக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, இது ஒரு உத்தியும்கூட. மற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரமாக உள்ளன, எனவே அனைத்தும் இறுதி செய்யப்படும் வரை காத்திருந்து, தங்கள் அறிவிப்பை கடைசியாக வெளியிடுவோம். அதிலும் ஒரு ஆச்சரியமூட்டும் அம்சம் உள்ளது என்று நேற்று பகாங் இந்திரா மக்கோத்தாவில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு அவர் கூறினார்.

கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவு குறித்துப் பேசிய ரஃபிஸி, ஜொகூர் தேர்தல் முடிவு பெர்சாமாவின் திசையை மாற்றாது என்றார்.

பல்வேறு மக்கள்தொகைக் குழுக்களிடையே வாக்காளர் ஏற்புத்தன்மையை மதிப்பிடுவதற்கு, கட்சிக்குத் தனக்கென சொந்த உள் அளவுகோல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

அரசியலில், 100 ஆண்டுகளாக இருந்து வரும் கட்சிகள் உட்பட, ஒவ்வொரு கட்சியும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் போதெல்லாம் சோதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *