ஜொகூரில் 75 வெளிநாட்டினர் கைது! குடிநுழைவுத் துறை அதிரடி!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 10,

ஜொகூரில் உள்ள வணிக அங்காடி கட்டிடத்தில் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 75 வெளிநாட்டினர்கள் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்காடிக் கடைகளில் வெளிநாட்டினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார்கள் கிடைக்க பெற்றதும் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெரும்பாலான வெளிநாட்டினர்கள் குறிப்பிட்ட இரு நிறுவனங்களின் மூலமாக மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த 33 வயது BANGLADESH ஆடவரையும் 4 உள்ளூர்வாசிகளையும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட BANGLADESH ஆடவரிடமிருந்து RM 4,300 ரிங்கிட் ரொக்கமும் 48 PASSPORTகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *