79 பங்களாதேஷிகள் கைது! செம்மோர் தொழிற்சாலையில் பிடிபட்டனர்

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஏப் 9: நேற்று இரவு, செம்மோர், காந்தன் தொழிற்பேட்டையில் உள்ள இரண்டு ரப்பர் கையுறைத் தொழிற்சாலைகளில் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையின்போது, ​​மொத்தம் 79 பங்களாதேஷ் நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கையில், தொழிலாளர் துறை, காவல்துறை, பொது நடவடிக்கைப் படை மற்றும் தேசியப் பதிவுத் துறை ஆகியவற்றின் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

பேராக் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜேம்ஸ் லீ கூறுகையில், முதல் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 56 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது தொழிற்சாலையில் பணி மாற்றத்தின்போது மேலும் 23 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும், நாட்டில் அதிக நாட்கள் தங்கியிருந்தது உட்பட, தங்களது வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

ஒரே தாய் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இரண்டு தொழிற்சாலைகளின் நிர்வாகம், பிற நிறுவனங்கள் அல்லது துறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியதாக நம்பப்படுகிறது  என்று நேற்ரு இரவு  நடந்த நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று லீ கூறினார்.

கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்து, இது அந்த நிறுவனத்தின் மீதான இரண்டாவது சோதனை என்றும் அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *