காராக் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய 7 வாகனங்கள்! மூவர் பலி!

top-news

கோலாலம்பூர், செப் 30: காராக் நெடுஞ்சாலையின் Km42 இல் இன்று அதிகாலை 7 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக இன்று அதிகாலை 3.33 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், எட்டு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பெந்தோங் தீயணைப்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஐவர் காயமடையவில்லை எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இரண்டு டிரெய்லர் லாரிகள், மூன்று டன் எடை கொண்ட லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கின. இதில் ஒரு லாரி தீப்பிடித்து எரிந்தது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்