நில ஆக்கிரமிப்பு: பிரதமர் மோடியிடம் புகார் மனு அளித்த 81 வயது பள்ளித் தோழர்
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
புதுடெல்லி, செப். 14 –
தனக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, 81 வயதான அஸ்கராலி வோரா தனது பள்ளித் தோழரான பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கராலி வோரா. தற்போது மராட்டிய மாநிலம் மீரா ரோடு பகுதியில் வசித்து வரும் அவர், கடந்த 1989-ஆம் ஆண்டு பயந்தர் கிழக்குப் பகுதியில் 2,810 சதுர மீட்டர் நிலத்தை சட்டப்பூர்வமாக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2011-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தனது நிலத்தை ஆக்கிரமித்ததாக வோரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பல ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



