வெள்ள அபாயத்தில் நாடு முழுவதும் 883 பள்ளிகள்!

top-news

கோல திரெங்கானு, நவம்பர் 11: நாடு முழுவதும் மொத்தம் 883 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் வெள்ளம் தாக்கும் அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சரவாக் 227 பள்ளிகளும், சபா (208), பகாங் (93), கிளந்தான் (91), தெரெங்கானு (90), பேராக் (45), சிலாங்கூர் (42), கெடா (23), கோலாலம்பூர் (19) , ஜோகூர் (19), பினாங்கு (15), நெகிரி செம்பிலான் (10) மற்றும் மலாக்காவில் 1 பள்ளி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழைக்கு தயார்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அமைச்சு எடுத்துள்ளதாக கல்வித்துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

திரெங்கானுவில், வெள்ளம் ஏற்பட்டால், 80 பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக பயன்படுத்த தயாராக உள்ளன என்று அவர் கூறினார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்