எகிப்திய சாலை விபத்தில் 8 மலேசிய மாணவர்கள் காயம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன. 27-

எகிப்து நாட்டின் போர்ட் சைட் எனுமிடத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில், அங்குள்ள அல்-அஸார் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று வரும் எட்டு மலேசிய மாணவர்கள் காயமடைந்திருப்பதை, வெளியுறவு அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.

கெய்ரோவில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் மலேசிய எகிப்து கல்விக் கழகம் மூலம், அம்மாணவர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் விஸ்மா புத்ரா கண்காணித்து உறுதிப்படுத்தும் என்று அது கூறியது.

எகிப்திய சாலை விபத்தில் உதவிகளை வழங்குவதற்காக, மலேசிய எகிப்து கல்விக் கழக அதிகாரிகள் அல் சலாம் போர்ட் சைட் மருத்துவமனைக்கு சென்று அம்மாணவர்களை சந்தித்திருப்பதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.“சிறு காயங்களுக்கு ஆளாகியுள்ள ஐந்து மாணவர்கள் அம்மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

“எஞ்சிய மூவர் தற்போது கண்காணிப்பின் கீழ் உள்ளனர். தொடர் சிகிச்சைக்காக அவர்கள் " மூவரும் கெய்ரோவில் உள்ள சயீட் கலால் மருத்துவமனைக்கு மாற்றப்பட விருக்கின்றனர்" என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா தெரிவித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *