அமெரிக்கா: பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு – 9 பேர் காயம்
- Surendran Sumdraraj
- 27 Apr, 2026
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள Indiana University அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 26 அதிகாலை நேரத்தில், “Little 500” சைக்கிள் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளூமிங்டன் நகரில் மக்கள் திரண்டிருந்த நிலையில், இரவு சுமார் 12.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணையில், இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி, அதில் இருந்த சிலர் துப்பாக்கி எடுத்துச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பெண்கள் நேரடியாகக் குண்டு தாக்கத்தால் காயமடைந்ததுடன், மற்ற 4 பேர் அச்சத்தில் ஓடும் போது ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 17 வயது சிறுமியும் உள்ளதாகவும், பெரும்பாலானோர் 18 முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக அவசர சேவை பிரிவினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர். தற்போது பெரும்பாலானோர் நிலைமை ஸ்திரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



