இரண்டு ஆண்டுகளில் 90 பேர் கைது – தேச நிந்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 26-
2024ஆம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் மொத்தம் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் சம்சுல் அனுவார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 58 பேர் கைது செய்யப்பட்டனர்; 2024ஆம் ஆண்டு 32 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த காலப்பகுதியில் மொத்தம் 193 விசாரணை ஆவணங்கள் (கேஸ் பேப்பர்கள்) திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்த 193 விசாரணைகளில் இருந்து வெறும் 14 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டில் மூன்று குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டில் 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
சட்டத்தின் அமலாக்கம் குறித்து அரசாங்கம் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்றும், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியை காக்கும் நோக்கில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



