RON97 பெட்ரோல் விலை 3 காசுகள் உயர்வு!

- Shan Siva
- 18 Dec, 2024
கோலாலம்பூர், டிச 18: RON97 ரக பெட்ரோலின் விலை நாளை முதல் நாடு முழுவதும் லிட்டருக்கு RM3 வெள்ளி 19 காசிலிருந்து RM3 வெள்ளி 22 காசாக 3 காசுகள் உயரும் என்று நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
RON95 ரக பெட்ரோலின் விலை
லிட்டருக்கு RM2 வெள்ளி 05 காசாகவும், தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு RM2 வெள்ளி 95 காசாகவும், கிழக்கு மலேசியாவில் லிட்டருக்கு RM2 வெள்ளி 15 காசாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விலை டிசம்பர் 25 வரை
அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *