ஓம்ஸ் அறவாரியத்தின் 19-ஆம் ஆண்டு தங்கப் பதக்க விழா!

top-news

கோலாலம்பூர், நவ. 24 –

மலாயா பல்கலைக்கழகத்தின் கலைப்புலத்தில் சிறந்த கல்வி திருச்சியினை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில், ஓம்ஸ் அறவாரியத்தின் 2026ஆம் ஆண்டுக்கான 19ஆவது தங்கப் பதக்க விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

மலாயா பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தின் விரிவுரை மண்டபம் F-இல் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 39 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில், இந்திய ஆய்வியல் துறையைச் சேர்ந்த 27 மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றனர். அவர்களில் இளங்கலைப் பட்டப்படிப்பைச் சேர்ந்த 16 பேரும், முதுகலைப் பட்டப்படிப்பைச் சேர்ந்த நான்கு பேரும், முனைவர் பட்டப்படிப்பைச் சேர்ந்த ஏழு பேரும் அடங்குவர்.

மேலும், மானிடவியல் மற்றும் சமூகவியல், புவியியல், ஆங்கில இலக்கியம், சுற்றுச்சூழல் ஆய்வியல், அனைத்துலக மற்றும் மூலோபாய ஆய்வியல் உள்ளிட்ட 12 இளங்கலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் இவ்விருதைப் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டனர்.

ஒரு மாணவர் இரு பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றதால், மொத்தம் 38 மாணவர்களுக்கு 39 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து 19 ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தின் கல்விச் சாதனையாளர்களை அங்கீகரித்து ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உயரிய சாதனைகளுக்கும் ஆதரவளிக்கும் ஓம்ஸ் அறவாரியத்தின் இம்முயற்சி பாராட்டுக்குரியது என வருகையாளர் அனைவரும் கூறினர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்