61 வயதில் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்? பாலிவுட்டில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

மும்பை, ஜூன் 4 –

பாலிவுட்டின் முன்னணி நடிகரான Aamir Khan, 61 வயதில் மூன்றாவது திருமணத்திற்குத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய ஊடகத் தகவல்களின்படி, அமீர்கான் தனது காதலியான கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை 5-ஆம் தேதி மும்பையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் எளிய நிகழ்வாக திருமணம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு தனது 60-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கௌரி ஸ்ப்ராட்டை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்திய அமீர்கான், அவருடனான உறவை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

அமீர்கான் ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோருடன் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில், கௌரி ஸ்ப்ராட்டுடன் அவரது மூன்றாவது திருமணம் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *