ஆல் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் மலேசிய அணி தோல்வி
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 9-
மலேசியாவின் முன்னணி ஆண் இரட்டையர் ஜோடி ஏரன் சியா – சோ வூய் யிக், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் மீண்டும் பட்டத்தை தவறவிட்டதால் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த ஜோடி, மூன்றாவது முயற்சியிலும் இந்த பெருமைக்குரிய போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. தென் கொரியாவின் உலக நம்பர் ஒன்று ஜோடி கிம் வொன் ஹோ – சியோ சுங் ஜேவிடம் அவர்கள் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தனர்.
பிர்மிங்காம் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்தது. 63 நிமிடங்கள் நீண்ட போட்டியில் மலேசிய ஜோடி 21-18, 12-21, 21-19 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
போட்டிக்குப் பின்னர் பேசிய ஏரன் சியா – சோ வூய் யிக், இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்தாலும் அது அவர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று தெரிவித்தனர். எதிர்காலத்தில் சூப்பர் 1000 போட்டியில் முதல் பட்டத்தை வெல்லும் இலக்குடன் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த தோல்வியினாலும் மலேசிய ரசிகர்கள் அவர்களின் உறுதியையும் போராட்டத்தையும் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



