அமைச்சரவை மாற்றம் குறித்து பரிசீலனை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும், மாறாக அமைச்சர் பதவிகளில் காலியாக உள்ளவற்றை நிரப்ப வேண்டும் என்றும் சூசகமாகக் கூறியுள்ளார்.

அமைச்சரவை இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்பதால், பெரிய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என்று தாம் நினைப்பதாக அன்வார் கூறினார்.

இருப்பினும், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை தாம் இன்னும் பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அந்த காலியிடங்களை நிரப்புவது அவசியம் என்றும் அவர் பெரோடுவாவின் முதல் பேட்டரி மின்சார வாகனமான QV-E ஐ மெனாரா மிட்டியில் அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *