கேபிள் திருடினால் 1 லட்சம் வரை அபராதம்! நாடாளுமன்றத்தில் விவாதம்
- Shan Siva
- 03 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 3: ரயில் பாதைகளில் அத்துமீறி நுழைவதற்கும், ரயில் கேபிள்களைத் திருடுவதற்கும் RM100,000 வரை அபராதம் உள்ளிட்ட கடுமையான
தண்டனைகளை விதிக்கும் வகையில், சட்டத்தில்
திருத்தங்களை அரசாங்கம் இறுதி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுள்ளது.
இதற்காக முன்மொழியப்பட்ட
சட்டத் திருத்தம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் Hasbi Habibollah தெரிவித்துள்ளார்.
கேபிள்
திருட்டினால் ஏற்படும் பயண இடையூறுகளைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த செனட்டர் ஹத்தா ரம்லியின் கேள்விக்கு ஹஸ்பி பதிலளித்தார்.
கேபிள்
திருட்டினால் ரயில் இயக்கத்தில் ஏற்படும் சேதம் மற்றும் இடையூறுகளைக் கருத்தில்
கொண்டு பார்த்தால், தற்போதுள்ள
தண்டனைகள் மிகவும் மென்மையானவை என்று ஹஸ்பி கூறினார்.
KTMB, பிரசரானா மலேசியா
பெர்ஹாட் மற்றும் ECRL திட்டம்
ஆகியவற்றில் கேபிள் திருட்டு வழக்குகள் அதிகரித்ததன் காரணமாக மொத்தம் RM50 மில்லியன் இழப்பு ஏற்பட்டதால், சட்டத் திருத்த நடவடிக்கையும் தூண்டப்பட்டதாக
அவர் கூறினார்.
ECRL திட்டத்தில்
மட்டும், மதிப்பிடப்பட்ட இழப்பு RM4.06 மில்லியனுடன் 71 கேபிள் திருட்டு
வழக்குகளும், மதிப்பிடப்பட்ட
இழப்பு RM0.69 மில்லியனுடன் 13
உபகரணத் திருட்டு மற்றும் சேத வழக்குகளும் பதிவாகியுள்ளதாக ஹஸ்பி கூறினார்.
மேலும், நாட்டின் வடக்குப் பகுதி வரையிலான ரயில் பாதையில்
அரசாங்கம் 1,146 சிசிடிவி கேமராக்களை நிறுவி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
24 மணி நேர
ரோந்துப் பணிகளை வலுப்படுத்துவதற்காக, KTMB மோப்ப நாய்களைப் பணியில் அமர்த்தியுள்ளதுடன், துணைப் போலீசாருக்காக 20 ஸ்க்ராம்ப்ளர்
மோட்டார் சைக்கிள்களையும் வாங்கியுள்ளதாக ஹஸ்பி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



