விபத்தில் யானைக் குட்டி மரணம்! தவிப்பில் தாய் யானை
- Shan Siva
- 02 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 2: ஜொகூர், மெர்சிங் அருகே கார் மோதியதில் குட்டி யானை ஒன்று உயிரிழந்தது.
விபத்து நடந்த இடத்தில், குட்டியின் தாய் என நம்பப்படும் ஒரு யானை சுற்றித் திரியும் காணொளி சமூக
ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கம்போங் பெங்காலான், புக்கிட் அஸ்லி அருகே, நேற்று ஒரு கார் குட்டி யானை மீது மோதி, பின்னர் 5 மீட்டர் ஆழமுள்ள
பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்தபோது, 31 வயதான ஓட்டுநர்
குளுவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத் தலைவர் அலியாஸ் ஹுசின் தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
வாகனத்தில் சிக்கியிருந்த ஓட்டுநர், மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாகவும். அவருக்கு இரு கால்களிலும் காயங்கள்
ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக
மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



