பரபரப்பாக வைரலான NKVE விபத்து! காரணமானவர் கைது
- Shan Siva
- 12 May, 2026
கோலாலம்பூர், மே 12:
என்.கே.வி.இ நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து, காணொளியில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, புரோட்டான் இன்ஸ்பிரா வாகனத்தின் 26 வயது ஓட்டுநரை காவல்துறை கைது
செய்துள்ளது.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை
மற்றும் அமலாக்கத் தலைவர் சம்சுரி இசா கூறுகையில், இந்தச்
சம்பவம் மே 9 ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், டூத்தா
சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் 28 வது கி.மீட்டரில்
நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
வேகமான பாதையில் சறுக்கி நின்ற
புரோட்டான் இன்ஸ்பிரா மீது, புரோட்டான் வீரா மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ்
வாகனங்கள் மோதியதாக அவர் கூறினார்.
இந்த மோதலின் தாக்கத்தால், வாகனங்கள் இடதுபுற சாலைத் தடுப்பில் மோதி, மூன்று
வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. விபத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் யாருக்கும் காயம்
ஏற்படவில்லை.
அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக சம்சுரி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



