99 ஸ்பீட் மார்ட்டில் இபிஎஃப் 5% பங்குகளை வாங்கியுள்ளது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 11 -

ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) நேரடி சத்தை உடன்பாட்டின் கீழ் 99 ஸ்பீட் மார்ட் ரிட்டேயில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 5.02 விழுக்காட்டு பங்குகளை வாங்கியுள்ளது.
இம்மாதம் 4ஆம் தேதி அந்த மினிமார்க்கெட் நடத்துநரிடமிருந்து இபிஎஃப் 42 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் பங்குகளை தான் வாங்கி இருப்பதை, புர்சா மலேசியாவிடம் அது தெரிவித்துள்ளது.

விற்பனையாளர் மற்றும் அதற்காக செலுத்தப்பட்ட தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.எனினும், இம்மாதம் 4ஆம் தேதி நிலவரப்படி ஒரு பங்கின் விலை 2 வெள்ளி 06 சென்னாக இருந்ததன் அடிப்படையில், அதன் தொகை 86 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான லீ தியாம் வா, அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 79.68 விழுக்காட்டை கொண்டிருந்து அதன் மிகப் பெரிய பங்குதாரராக இருக்கின்றார்.

நேற்று அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2 வெள்ளி 10 காசாக பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,764 கோடி வெள்ளியாகவும் பதிவாகி இருந்தது.

KWSP membeli 5.02% saham dalam 99 Speed Mart pada 4 Jun, melibatkan lebih 42 juta unit saham. Nilai anggaran pembelian ialah RM86.89 juta. Lee Thiam Wah kekal sebagai pemegang saham terbesar dengan 79.68% pemilikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *