அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; நடிகர் ராகவா லாரன்ஸின் பதிவு பரபரப்பு
- Surendran Sumdraraj
- 12 Jun, 2026
சென்னை, ஜூன் 12 –
நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், “அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள பதிவு தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ராகவா லாரன்ஸ் அரசியலில் களமிறங்கப் போவதாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரது சமீபத்திய பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக தனது வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி அந்த அறிவிப்பை ஒத்திவைத்திருந்தார். பின்னர் தனது முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் எந்த அரசியல் கட்சியுடன் இணையவுள்ளார் அல்லது தேர்தல் களத்தில் நேரடியாக களமிறங்குவாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது பதிவு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



