‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ராம் சரண்

top-news
FREE WEBSITE AD

மலையாளத்தில் வெளியான ‘வாழ 2’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த படக்குழுவினரை பிரபல நடிகர் ராம் சரண் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

சவின் எஸ்.ஏ இயக்கத்தில் புதிய முகங்கள் ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வாழ 2’ திரைப்படம், நட்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவை, உணர்ச்சி கலந்த முறையில் வெளிப்படுத்துகிறது. இந்த படம் மலையாளத்தில் மட்டும் அல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ராம் சரண் ‘Peddi’ படப்பிடிப்பு தளத்தில் ‘வாழ 2’ படக்குழுவினரை சந்தித்து வாழ்த்தினார். மேலும், தனது சமூக வலைதள பதிவில், “இந்த படக்குழுவினரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், தற்போது தெலுங்கு ரசிகர்களையும் சென்றடைய உள்ளது” என குறிப்பிட்டார்.

அத்துடன், இயக்குனர் சவின் எஸ்.ஏ, தயாரிப்பாளர் குழு மற்றும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளதால், அதன் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *